இமானுவேல் சேகரன் நினைவு நாள் : அமைச்சர்கள் மரியாதை

0 363
Stalin trichy visit

திருச்சி, செப். 11 சமூகநீதி போராளி இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர்கள் கே.என்.நேரு, மெய்ய நாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

சமூகநீதி போராளி இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக மாவட்ட  அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவ படத்திற்கு  திமுக  முதன்மைச் செயலாளர் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்..

இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், மாமன்ற உறுப்பினர்கள், மண்டல குழு தலைவர்கள், பகுதி செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் இம்மானுவேல் சேகரனின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்கள்..

Leave A Reply

Your email address will not be published.