பைக்கில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு

0 165
Stalin trichy visit

திருச்சி செப் 15- புதுக்கோட்டை மாவட்டம் காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் இவரது மகன் கார்த்திகேயன் (வயது 22)இவர் கடந்த 6ந்தேதி புதுக்கோட்டையில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலைய பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எடமலை பட்டி புதூரில் இருந்து பஞ்சப்பூர் சாலையில் இரு சக்கர வாகனத்தில் கார்த்திகேயன் சென்று கொண்டு இருந்தபோது திடீரென்று இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்று நிலை தடுமாறி சாலையின் நடுவே கார்த்திகேயன்
இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தார். இந்த விபத்து சம்பவத்தில் கார்த்திகேயன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து நேற்று கார்த்திகேயன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கண்டோன்மென்ட் தெற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.