மாற்றுத்திறனாளி மாணவியிடம் வரம்பு மீறி பேசிய பேராசிரியர் கைது

0 300
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவியிடம் வரம்பு மீதி பாலியல் ரீதியாக செல்போனில் பேசிய தமிழ் துறை பேராசிரியர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் துறை பேராசிரியர் நாகராஜன் என்பவர் தமிழ் துறையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாற்று திறனாளி மாணவி இடம் செல்போனில் பாலியல் ரீதியாக உடலுறவுக்கு அழைத்து செல்போனில் பேசிய ஆடியோ வைரலானது.

இதையடுத்து கல்லூரி வளாகத்தில் உயர்கல்வி கல்லூரி மண்டல இணை இயக்குனர் ராதாகிருஷ்ணன், கல்லூரியின் முதல்வர் கணேசன் மற்றும் கல்லூரி உள் புகார் விசாரணை கமிட்டி முன்பாக விசாரணை செய்தனர். மாற்றுத்திறனாளி மாணவியிடம் பேராசிரியர் நாகராஜன் வரம்பு மீறி பேசியது உறுதி செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பான விசாரணை அறிக்கையை உயரதிகாரிகளுக்கு இணை இயக்குனர் அனுப்பி வைத்தார்.

அதன்பேரில் சென்னை உயர் கல்வித் துறை ஆணையர் சுந்தரவல்லி வரம்பு மீறிய பேராசிரியர் நாகராஜனை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து கல்லூரி முதல்வர் முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் நாகராஜனை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்து கைது செய்துள்ளனர்.

பேராசிரியர் நாகராஜன் இதற்கு முன் வேறு மாணவிகளிடம் இதுபோல பாலியல் தொந்தரவு அளித்தாரா? இவரது மூளை சலவைக்கு மாணவிகள் வேறு யாரேனும் பலியாகி உள்ளானரா அதன் விபரம் என்ன என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். பேராசிரியர் நாகராஜன் மீது இதற்கு முன்பு இரு முறை இது போன்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகிறது அது குறித்தும் முசிறி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.