விஜய் பிரச்சாரத்தில் முறையான திட்டமிடல் இல்லை – அமைச்சர் அன்பில் மகேஷ்

0 179
Stalin trichy visit

திருச்சி, செப். 15  திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி  நேற்றுசெய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது  திமுக முப்பெரும் விழா, மண் – மொழி – மானம் -காக்க தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்று ஒவ்வொரு வாக்குசாவடிகளில் உறுதிமொழி ஏற்போம்.
திமுகவை எதிர்கட்சிகள், எதிரிகள் விமர்சிப்பது வழக்கமான ஒன்றுதான். விஜய்,
“கேட்கல கேட்கல ” என்று சொல்வதைக் காட்டிலும்,
கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் திருச்சி மாவட்டத்திற்கு திமுக செய்துள்ள வளர்ச்சி
திட்டங்களை அவர் பார்க்கவில்லை என்றே கூற வேண்டும்.
நிதி விடுவிப்பு போன்ற பிரச்சனைகளில் மத்திய அரசு, ஆளும் திமுக அரசுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. மத்திய அரசின் இந்த போக்கை மக்களிடம் எடுத்து சொல்லுகின்ற விதமாக ஒவ்வொரு வீடாக நேரடியாக சென்று அவர்களை ஓரணியில் தமிழ்நாடு என்கின்ற இயக்கத்தில் இணைத்திட வேண்டும் என திமுக தலைமை வலி
யுறுத்தியது. அந்த வகையில் மணப்பாறை திருவரம்பூர் திருச்சி கிழக்கு மூன்று தொகுதிக்கும் கொடுக்கப்பட்ட குறைந்தபட்ச இலக்கு 3, 29,000 உறுப்பினர்கள் .

ஆனால் அதை கடந்து தற்போது நாங்கள் 3,59,000 பேரை ஓரணையில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைத்திருக்கின்றோம். வரும் 20 ஆம் தேதி தமிழ்நாட்டை தலை குனிய விட மாட்டேன் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் திருச்சியில் நடை பெறுகிறது.

திருச்சி மாவட்டத்திற்கு மட்டும் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செய்துள்ளது .   ஒட்டுமொத்தமாக திருச்சிக்கு எதுவும் செய்யவில்லை எந்த பிரயோஜனமும் இல்லை என விஜய் சொல்வதை அறிவு சார்ந்த திருச்சி மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விஜய் பிரச்சாரத்தில் முறையான திட்டமிடல் இல்லை. மக்களுக்கு சொல்ல வேண்டிய கருத்துகளை தெளிவாக
கொண்டு செல்வதற்கான முன்னேற்பாடுகளை அவர் மேற்கொள்ள வேண்டும் என்றார்

Leave A Reply

Your email address will not be published.