திருச்சியில் தந்தை பெரியார் சிலைக்கு முதல்வர் மாலை அணிவித்து மரியாதை : முன்னேற்பாடு பணிகள் அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
திருச்சி, செப். 16 தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (செப்.17) மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார். இதை முன்னிட்டு அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், நகரப் பொறியாளர் சிவபாதம், மாவட்ட நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.