காப்பகத்தில் இருந்த முதியவர் மாயம்

0 231
Stalin trichy visit

திருச்சி செப் 17 -திருச்சி கே.கே நகர் சுந்தர் நகர் சிம்கோ காலனியை சேர்ந்தவர் சையது அகமது. இவர் அந்தப் பகுதியில் முதியோர் இல்லம்  நடத்தி வருகிறார்.
இந்நிலையில் முதியோர் இல்லத்தில் திருச்சி பட்டவர்த் ரோட்டை சேர்ந்த வேல்முருகன் (வயது 70) என்பவர் சேர்ந்து தங்கி இருந்தார்.இந்த நிலையில் வேல்முருகன் கடந்த 14 ந்தேதி முதியோர் இல்லத்திலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இது தொடர்பாக சையத் அஹமத் கே.கே நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியோர் இல்லத்தில் இருந்து காணாமல் போன வேல்முருகனை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.