“தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” தீர்மான ஏற்பு கூட்டம்: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை

0 359
Stalin trichy visit

திருச்சி, செப்.19  திருச்சி தெற்கு மாவட்டத்தில் “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு கூட்டம் நாளை (செப்.20) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

திருச்சி தெற்கு மாவட்டத்தில் தமிழ்நாட்டின் மண் – மொழி – மானம் காக்க கழக தலைவர் அவர்களால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு முழுவதும் 68,000 மேற்பட்ட வாக்குச்சாவடி சார்பில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தால் முன்மொழியப்பட்டுள்ள “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்” என்ற தீர்மான ஏற்ப கூட்டம் திருச்சி தெற்கு மாவட்டத்தில்,  நாளை (செப்.20)  மாலை 4.30 மணிக்கு திருச்சி பாலக்கரை ரவுண்டானா (மாட்டு ஆஸ்பத்திரி அருகில்) நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கழக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகின்றார்.

இந்தநிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள் தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் – நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், அனைத்து உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.