கழிவு சேகரிப்பு இயக்கம் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருச்சி, செப்.19 திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், இனாம் சமயபுரம் ஊராட்சியில் தூய்மை இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் அலுவலகம் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கான தூய்மை உறுதிமொழியை தூய்மைப்பணியாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கும் வகையில் கழிவு சேகரிப்பு இயக்கப்பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமையின் திட்ட இயக்குநர் கங்காதாரணி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.