கே.கே.நகர் ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

0 179
Stalin trichy visit

திருச்சி, செப்.24 திருச்சி கே.கே. நகர் இந்திரா நகர் ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம் கொடியேற்றத்துடன்  துவங்கியது

திருச்சி கே.கே. நகர் இந்திராநகர் ஸ்ரீ அலமேலு மங்கா சமேத சீனிவாச பெருமாள் திருக்கோவில் தேரோட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு விமர்சியாக நடைபெற்றது இதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் நடைபெறும் பிரம்மோற்சவ விழா இந்த ஆண்டு 25 ஆவது ஆண்டாக நடைபெற உள்ளது இதன் துவக்க விழாவான கொடியேற்றம் நேற்று (செப். 23) காலை 9 மணி அளவில் கோவில் வளாகத்தில் நடைபெற்றது இந்த விழாவில் கோவிலில் உள்ள கொடிமரத்தில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடைபெற்றது.

இந்த விழாவில் இரவு ஏழு முப்பது மணி அளவில் இந்திர விமானத்தில் சீனிவாச பெருமாள் வீதி உலா நடைபெறும் இதேபோன்று பத்து நாட்களும் பல்வேறு வகையான விமானங்களில் பெருமாள் வீதி உலா நடைபெறும் இதனைத் தொடர்ந்து வரும் 2 ஆம் தேதி அன்று காலை 8 45 மணியளவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் 3ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறும் திருமஞ்சனத்துடன் திருவிழா நிறைவு பெற உள்ளது.  இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் பிரம்மோற்சவ நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும் என கோவில் நிர்வாக குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.