துவாக்குடி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் : அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

0 203
Stalin trichy visit

திருச்சி, செப். 24  திருச்சி மாநகராட்சி 40வது வார்டு மற்றும் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகராட்சி மண்டலம் மூன்றுக்கு உட்பட்ட 40 வது வார்டு பகவதிபுரத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகமிற்கு மாநகராட்சி மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் தலைமை வைத்தார்.   திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி 40 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

தமிழக பள்ளிகளுத்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் இந்தமுகாமில் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

அதேபோல் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு பெல் குடியிருப்பு வளாகத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த முகாமிற்கு துவாக்குடி நகராட்சி தலைவர் காயம்பு நகராட்சி ஆணையர் பட்டுசாமி முன்னிலை வகித்தார் தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முகாமை தொடங்கி வைத்து சுமார் 13 பேருக்கு பட்டா பெயர் திருத்தம் மற்றும் சொத்து வரி மற்றும் சொத்துவரி பெயர் மாற்றம் ஆகிய ஆணைகளை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.