அரசு வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்தவர் மீது வழக்கு
திருச்சி, செப்.27 திருச்சி திருவெறும்பூர் கல்லணை ரோடு வேங்கூர் பி.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (40).இவருக்கு திருச்சி சிறுகாம்பூர் பகுதி சேர்ந்த சக்திவேல் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்நிலையில் கண்ணனுக்கு அரசு வேலை ஏற்பாடு செய்வதாக கூறி ரூ.4,47,000 பணத்தை கேட்டார். இதனை நம்பிய கண்ணன் பணத்தை வங்கி மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி செலுத்தி உள்ளார். பின்னர் தொகையை பெற்றுக் கொண்ட சக்திவேல் எந்த வேலையும் ஏற்பாடு செய்யாமல் பணத்தைத் திருப்பித்தராமல் ஏமாற்றியுள்ளார்.இதனையடுத்து கண்ணன் இதுகுறித்து அரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டப்பட்ட சக்திவேல் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.