உய்யக்கொண்டான் திருமலையில் 2 கடைகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை

0 138
Stalin trichy visit

திருச்சி செப்.27 திருச்சி உய்யக்கொண்டான் திருமலை கிழக்கு விஸ்தரிப்பு சண்முகா நகர் 6 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் பிரகதீஸ்வரன். (வயது 65). இவர் உய்யக்கொண்டான் திருமலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ஆவண காப்பக மையம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மையத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ 75 ஆயிரம் படம் திருடு போயிருந்ததுதெரியவந்தது. இதே போல் அருகில் இருந்த ஸ்டூடியோவிலும் பூட்டு உடைக்கப்பட்டு கேமரா மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது. இது குறித்த புகாரின் பேரில் திருச்சி அரசு மருத்துவமனை குற்ற பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.