ரத்தக் கையெழுத்து கோரிக்கையுடன் முதல்வரை சந்திக்க உள்ளோம் : கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் பேட்டி

0 244
Stalin trichy visit

திருச்சி செப் 27 ரத்தத்தில் எழுதப்பட்ட கோரிக்கையுடன் முதல்வரை சந்திக்க உள்ளோம் – தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் பேட்டி

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட ஆயத்த மாநாடு திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஒட்டலில் மாநிலத் தலைவர் தில்லைகோவிந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆயத்த மாநாட்டில் நிர்வாகிகள் கார்த்திக், மாரியப்பன், செல்வராஜ், குமார், ரமேஷ், முருகன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில பொதுச் செயலாளர் குரு.நாகப்பன்,  தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பாக அலுவலக உதவியாளர்களுக்கு இணையாக கிராம உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.15700/-யை வழங்க வேண்டும், இறந்த மற்றும் ஓய்வு பெற்ற கிராம உதவியாளர்களின் CPS-இறுதித் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் கிராம உதவியாளர்களுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.
மேலும், அக்டோபர் மாதம் 14ஆம் தேதி வட்ட தலைமை அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவது, நவம்பர் மாதம் 14ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் 4அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்துவது, டிசம்பர் மாதம் கிராம உதவியாளர்கள் அனைவரிடத்திலும் ரத்த கையெழுத்து பெற்று அதனை முதல்வரிடம் டிசம்பர் 17ஆம் தேதி சென்னையில் பேரணியாக சென்று கிராம உதவியாளர்களின் வாழ்வாதார கோரிக்கையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையோடு ஒப்படைப்பது, 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்.
பிப்ரவரி மாதத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.