சாலை பாதுகாப்பில் நாட்டு நலப் பணி திட்ட மாணவர்கள் பங்கேற்பு
திருச்சி, செப். 29 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப் பணி திட்ட அமைப்பின் சிறப்பு முகாம் வெங்கிடாஜலபுரத்தில் கடந்த 26 ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
அதன் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக 28 ந்தேதி ஞாயிறு காலை 11.00 மணியளவில் சாலை பாதுகாப்பில் மாணவர் பங்கு என்னும் தலைப்பில் சாலை பாதுகாப்பு படையின் திருச்சி மாவட்ட முதன்மை அலுவலர் K.பாலகிருஷ்ணன் RSP-TPTWசிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சிக்கு புள்ளம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி NSS திட்ட அலுவலர் K.N சந்திரபிரகாஷ் வரவேற்புரை ஆற்றினார். பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர் மா.சரவணவேல் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ஹென்றி பிரபாகரன் மற்றும் பள்ளியின் இளநிலை உதவியாளர் மார்ட்டீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவத் தொண்டர் தேவ்நாத் நன்றியுரை வழங்கினார்கள்.