அதிகாரியின் அலட்சியத்தால் கையை இழந்த மின்வாரிய ஊழியர்: நடவடிக்கை எடுக்க கேங்மேன் – பணியாளர் சங்கம் கோரிக்கை
திருச்சி,செப்.30 அதிகாரியின் அலட்சியத்தால் ஒரு கையை இழந்த மின்வாரிய ஊழியர்
தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர் சங்கம் சார்பில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திருச்சி தென்னூர் பகுதியில் உள்ளமின்வாரிய அலுவலகத்தில் உள்ள
உதவி செயல் பொறியாளர் நாராயணன் உத்தரவின் பெயரில் தென்னூர் கோட்டத்திற்கு உட்பட்ட பணியாளர்களையும் சிந்தாமணி பிரிவு ஆக்க முகவர் தாஸ்,மெயின் கார்டு கேட் பிரிவு மின்பாதை ஆய்வாளர் பிரசன்னா ஆகிய இருவரின் மேற்பார்வையில் தென்னூர் கோட்டத்திற்கு உட்பட்ட தில்லை நகர் பிரிவு சீனிவாசன் நகர் உறையூர் ஆகிய நான்கு பிரிவு உதவி மின் பொறியாளர் அறிவுறுத்தலின் பெயரில் தில்லைநகர் பீடர் சாஸ்திரி ரோடு பீடர் ஆகிய இருஉயர் மின்னழுத்த கேபிள் மற்றும் பணியை உரிய பணி ஒதுக்கீடு இன்றி விடுமுறை நாள் என்று கூட பாராமல் நான்காம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு பகலாக அனைத்து கேங்மேன் பணியாளர்களையும் ஈடுபடுத்தி இரண்டு தினங்களாக கடுமையான பணிகளை செய்ய நிர்மத்திக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் இன்று காலை ஏழு முப்பது மணி அளவில் தென்னூர் உதவி செயற்பொறியாளர் நாராயணன் தலைமையில் மெயின்கார்டுகேட் மின்பாதை ஆய்வாளர் பிரசன்னா மேற்பார்வையில் மின் கேபிளை இணைக்கும் பணிகள் மேற்கொண்டிருந்தனர் அப்போது பாலமுருகன் (வயது 36) கேங்மேன் பணியாளரிடம் மின் இணைப்பு ஆப் செய்யப்பட்டுள்ளது.மின்கம்பத்தில் ஏறி பணியை மேற்கொள்ள அதிகாரி சொன்னதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மின் இணைப்பு ஆப் செய்யாமல் இருந்ததால் கேங்மேன் பணியாளரின் வலது கையில் மின்சாரம் பாய்ந்து மேலிருந்து கீழே விழுந்து பெரும் விபத்து நேர்ந்து உள்ளதாக தெரிவித்தனர்.
தற்பொழுது அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இந்நிலைக்கு அதிகாரியின் அலட்சியப் போக்கு தான் காரணம் எனவும் இது கொலை முயற்சிக்கு சமமானது எனவும் கேங்மேன் பணியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு மின்வாரிய கேங்மேன் மற்றும் பணியாளர்கள் சங்கம் சார்பில் தெரிவித்தனர்.