மண்டலம் 2,3 இல் நிறைவேற்றப்பட்ட திட்டப்பணிகள்: அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்
திருச்சி, அக்.1 திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மாநகராட்சி பொது நிதி சுமார் 85.25 எண்பத்தி ஐந்து லட்சத்தி 25 ஆயிரம் மதிப்பீட்டில் மண்டலம் இரண்டு மற்றும் மூன்றிற்கு உட்பட்ட கீழ்காணும் பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட மக்களின் அடிப்படை திட்டங்களை மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.
49வது வார்டு ராமமூர்த்தி நகரில் சிமெண்ட் தளம் மற்றும் கான்கிரீட் தடுப்பு சுவர், குமரன் தெரு, 35வது வார்டு மாரியம்மன் கோவில் தெரு அருகில் செட் மாமன்ற உறுப்பினர் அலுவலகம், மயானத்தில் காத்திருப்போர் கூடம், 44வது வார்டு அடிபம்ப் சின்டெக்ஸ் தொட்டி, 43வது வார்டு கமலா தெரு விளையாட்டு மைதானத்திற்கு சுற்றுச்சுவர், 39வது வார்டு பாத்திமாபுரம் அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள அடி பம்ப் சின்டெக்ஸ், நாகப்பசாமி கோயில் தெரு கை பம்ப் சின்டெக்ஸ் டேங்க், பிரியா நகர் சின்டெக்ஸ் டேங்க், 39வது வார்டு
எல்லக்குடி மயானத்திற்கு போர்வெல் அமைக்கப்பட்டது .

இந்நிகழ்வுகளில் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன், பகுதி கழகச் செயலாளர்கள் நீலமேகம், விஜயகுமார், சிவக்குமார், மாமன்ற உறுப்பினர்கள் லீலாவேலு, செந்தில், கார்த்தி, ரெக்ஸ், சுரேஷ், உதவி ஆணையர் V.சரவணன், உதவி செயற்பொறியாளர் ஜெகஜீவன்ராமன்,
இளநிலைப் பொறியாளர் – ஜோசப்ராஜ், இளநிலைப்பொறியாளர் – நரசிங்கர்த்தி இளநிலைப்பொறியாளர் – சுந்தரவடிவேல், இளநிலைப்பொறியாளர்

மண்டலம்-3 பிரசாந்த் மற்றும் கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.