திருச்சியில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டுமான பணிகள்: துரைவைகோ எம்.பி. ஆய்வு

0 232
Stalin trichy visit

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ  , திருச்சி மாநகரின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள மாரிஸ் மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகளையும், 10 மணியளவில் அரிஸ்டோ மேம்பால கட்டுமானப் பணிகளையும் இரயில்வே, மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களை வரவழைத்து  நேரில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது   கட்டுமானப் பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதங்கள் குறித்து  விசாரித்தார். இந்த பின்னடைவிற்கு ஒப்புதல் மற்றும் அனுமதி பெறுவதற்கான நடைமுறையில் ஏற்பட்ட தாமதமே காரணம் என்று பதிலளிக்கப்பட்டது. மேலும், அடுத்தடுத்து நடைபெற வேண்டிய பணிகளின் செயல்திட்டங்கள் மற்றும் காலக்கெடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

அதிகபட்சமாக இரயில்வே நிர்வாகம் 2026, பிப்ரவரி மாத இறுதிக்குள் முடித்துதருவதாகவும், அதன் பிறகு இரண்டு மாதத்தில் மாநகராட்சி கட்ட வேண்டிய பாலத்தின் இரு பகுதிகளையும் கட்டிமுடித்து, 2026, ஏப்ரல் இறுதிக்குள் மாரிஸ் மேம்பாலப் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

பின்னர், அரிஸ்டோ மேம்பாலக் கட்டுமானப் பணிகளின் நிலையை ஆய்வு செய்தார். . இந்த ஆய்வில் இரயில்வே துறை அதிகாரிகளும், ஒப்பந்ததாரர்களும் உடனிருந்தனர். அரிஸ்டோ மேம்பால கட்டுமானப் பணியில் ஏற்பட்டுள்ள தாமதங்களைச் சரிசெய்து, விரைவாக முடிக்குமாறு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் அறிவுறுத்தினார். . அதன் அடிப்படையில், 2026, ஜனவரி இறுதிக்குள் இரயில்வே மேம்பாலப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, அதன் பிற்கு நான்கு மாத காலத்தில், மாநில நெடுஞ்சாலைத்துறை தாம் கட்டவேண்டியப் பகுதிகளை கட்டிமுடித்து 2026, மே மாதம் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று உறுதியளித்தனர்.

திருச்சியின் முக்கிய மேம்பாலங்களான மாரிஸ் மற்றும் அரிஸ்டோ மேம்பாலம் உயர்தரத்துடன் விரைவாக கட்டி முடிக்கப்பட்டு,  மாரிஸ் மேம்பாலம் 2026, மே மாதமும், அரிஸ்டோ மேம்பாலம் 2026, ஜூன் மாதமும் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் நம்புகிறேன். இதற்காக, இப்பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து, உரிய நேரத்தில் முடிக்க அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்வேன் என்று தெரிவித்தார். 

Leave A Reply

Your email address will not be published.