வெவ்வேறு விபத்துகளில்  இரண்டு பேர் பலி

0 129
Stalin trichy visit

திருச்சி, அக்.2 திருச்சி அக்டோபர் இரண்டு திருச்சி கருமண்டபம் ஸ்ரீராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 75) பீமநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன்(52) நண்பர்களான இவர்கள் கருமண்டபம் இளங்காட்டு மாரியம்மன் கோவில் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் ராஜமேணிக்கம் மீது மோதியது இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராஜமாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார் இதேபோன்று திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூர் பஸ் நிறுத்தம் பகுதியில் சாலையை கடக்கும் என்று அடையாளம் தெரியாத தொழிலாளிஅந்த வழியாக சென்ற வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இறந்தவருக்கு சுமார் 45 வயது இருக்கும் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை அதேபோன்று விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்தும் தகவல் கிடைக்கவில்லை இது பற்றி மேலபஞ்ச போர் கிராம நிர்வாக அலுவலர் மில்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.