மாநில அளவிலான சிலம்ப போட்டி: தங்கம் வென்று மாணவி சாதனை

0 245
Stalin trichy visit

திருச்சி, அக். 17  தமிழ்நாட்டின கடைக்கோடி பகுதிகளில் இருந்து சர்வதேச மற்றும் தேசிய அளவிலான சாதனையாளர்களை உருவாக்கும் மகத்தான முயற்சிக்கு ‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்’ நடத்தப்படுகிறது. இதில் சிலம்பம் விளையாட்டில் திருச்சியை சார்ந்த மாணவி தங்கபதக்கம் வென்றுள்ளார்.

திருச்சி, M.I.E.T. பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு தகவல் தொழில் நுட்ப துறையை சார்ந்த மாணவி v. பாண்டி வினோதினி முதல் அமைச்சர் கோப்பைக்கான சிலம்பம் விளையாட்டில் மாநில அளவில் தங்கம் பதக்கம், ஒரு லட்சம் ரூபாய் பரிசு மற்றும் சான்றிதழ்கள் பெற்று திருச்சிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இந்த மாணவியை கல்லூரி தரப்பில் இருந்தும் பாராட்டி கௌவுரவப்படுத்தியுள்ளனர்.
மேலும் இந்த மாணவிக்கு பொதுமக்கள், நெட்டிஷன்கள் பாராட்டுக்களை குவித்து வருகின்ற னர்.

Leave A Reply

Your email address will not be published.