கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

0 250
Stalin trichy visit

திருச்சி, அக். 17  முசிறியில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்டம், முசிறியில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சம்சுதின், சரவணகுமார், குமரகுருபரன், ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினர்.

அப்போது 1.4.2023க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை காரணம் காட்டி 23.8.2010 முன்னதாக பணி ஏற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலில் இருந்து ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழ்நாடு அரசு சீராய்வு மனு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இடைநிலை, முதுகலை ஆசிரியர்கள், மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதம் மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.