சிறப்பு குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம்

0 186
Stalin trichy visit

தீபாவளி விழா சிறப்பு குழந்தைகளுடன் புத்தாடை, இனிப்பு, காரம் கொடுத்து கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளரும், தண்ணீர் அமைப்பின் செயல் தலைவர் கே.சி.நீலமேகம், தலைமையில், தண்ணீர் அமைப்பு செயலாளர் பேராசிரியர் கி. சதீஷ்குமார் சிறப்புரை வழங்கினார்.

முன்னதாக ஹோலி கிராஸ் நெஸ்ட் சிறப்புப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்சகோதரி நான்சி வரவேற்புரை ஆற்றினார்.

ஹோலி கிராஸ் நெஸ்ட் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அருட்சகோதரி பபியோலா  வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்புரை வழங்கிய பேராசிரியர் சதீஷ்குமார்: 100 கோயில்களுக்கு 100 தேவாலயங்களுக்கு 100 பள்ளிவாசலுக்கு சென்று வந்த பயன் இந்த ஒரு பள்ளிக்கு வந்து இந்த குழந்தைகளை கண்டு அவர்களுக்கு அன்பான பரிசுப் பொருட்கள் வழங்கினால் கிடைக்கும். இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள், குழந்தைகள் இருவரும் தெய்வத்தன்மை மிக்கவர்கள், பல இரக்கம் கொண்ட மனிதர்கள் பரிசுத்தமான ஆசிரியர் பணியாற்றுகின்ற அவர்கள் பணி சிறப்பாக ஆற்றி இது போன்ற ஒடுக்கப்பட்ட அடித்தட்டு ஏழை குடும்பங்களில் பிள்ளைகளை அரவணைத்து எடுத்து கல்வி வழங்கும் என்ற பணி போற்றத்தக்கது பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டார்.

குழந்தைகளுக்கான உலகத்தை, குழந்தைகளுக்கானபாதுகாப்பை, குழந்தைகளுக்கான கல்வியை, கனவை நினைவாக்குகிற இடைவெளியை சமூகம் அவர்களுக்கு வழங்க வேண்டும் சர்வதேச அளவில் போர் சூழலில் குழந்தைகளை அதிகம் பாதிக்கப்படுகின்றனர் குழந்தைகள் வாழ்வதற்கான அமைதியான பூமியை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும் இங்கு பயிலக்கூடிய சிறப்பு குழந்தைகள் ஒவ்வொருவரும் கல்வி பாதுகாப்பு, உணவு, உடை, சுகாதாரம் ஆகியவற்றை சிறப்பாக வழங்கி பணியாற்றும் ஆசிரிய பெருமக்கள் போற்றுதலுக்குரியவர்கள் இவர்களுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது உள்ளபடியே பொருத்தமாக இருக்கிறது தொடர்ந்து இது போன்ற பணிகளை நீங்கள் மேற்கொண்டு சிறப்பு குழந்தைகள் நலனுக்காக பாடுபட வேண்டும் என்று வாழ்த்தினார்.

நிகழ்வில் வரகனேரி ரவிச்சந்திரன் மற்றும் மணி பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் மோகன்  ஒருங்கிணைத்தார்.

நிகழ்வின் நிறைவில் அனைத்து குழந்தைகளுக்கும் இனிப்பு, காரம் மற்றும் புத்தாடை தீபாவளி பரிசாக வழங்கப்பட்டது

Leave A Reply

Your email address will not be published.