கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் கைது
திருச்சி, அக். 17 திருச்சி பாலக்கரை திருச்சி காவேரி நகர் 6வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் ( 29 ). ஐடிஐ முடித்துள்ளவர். இவர் நேற்று காந்தி மார்க்கெட் பகுதியில் காய்கறி வாங்க சென்று கொண்டிருந்தார்.
அப்போது இவரை வழிமறித்த வழிமறித்த பாலக்கரை கோரிமேடு தெருவை சேர்ந்த மகேந்திரன் (25) என்பவர்செல்போனை பற்றி சென்றார் .இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மகேந்திரனை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.