துறையூரில் தீபாவளி பலகாரச்சீட்டு: ஒரு கோடி ரூபாய் வசூலித்து மோசடி

0 168
Stalin trichy visit

திருச்சி, அக்.18  துறையூரில் தீபாவளி பலகாரச்சீட்டு: ஒரு கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்தவர் தலைமறைவு

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில், தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களிடம் இருந்து பலகார சீட்டு எனும் பெயரில் பணம் வசூலித்த மோசடி சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

துறையூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்ற நபர்,  தீபாவளி பாலகார சீட்டு” என்ற பெயரில், ஒரு மாதத்திற்கு ரூ.500 வீதம், 12 மாதங்களுக்கு பொதுமக்களிடம் இருந்து பணம் வசூலித்து வந்துள்ளார். பலர் அவரிடம் நம்பிக்கை வைத்து பணம் செலுத்திய நிலையில், தற்போது அவர் சுமார் ஒரு கோடி ரூபாய் பணத்துடன் திடீரென தலைமறைவாகியுள்ளார்.

இதனால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் பெருமளவில் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறை அதிகாரிகள் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ஆனந்தனை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.