திருச்சி மாநகராட்சி 24-வது வார்டில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
திருச்சி, அக். 18 திருச்சி மாநகராட்சி மண்டலம் 5, வார்டு எண்.24 பகுதிகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் பல்துறை உயர் சிறப்பு மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சியர் சரவணன், முகாமின் செயல்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளுக்கு மருத்துவம் சார்ந்த நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்ழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் குமரவேல், இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கோபிநாத், மாவட்ட சுகாதார அலுவலர் ஹேமசந்த் காந்தி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.