கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு : விஸ்வகர்மா அமைப்பு கோரிக்கை

0 209
Stalin trichy visit

திருச்சி அக் 18  சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை தமிழ்நாடு அனைத்து விஸ்வகர்மா சமுதாய சங்க ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு தியாகராஜ பாகவதர் பேரவை (எம்.கே.டி) மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- .

கோவை நகரில் குறிஞ்சி சிட்கோ தொழிற்பேட்டையில் 9.10.2025 அன்று தங்க நகை தொழிலாளர் வாழ்வு மேம்பட தங்க நகை தொழிற்பூங்கா திட்டத்திற்கு நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டி திட்டப்பணியை வைத்த தமிழக முதலமைச்சர்க்கு தமிழ்நாடு அனைத்து விஸ்வகர்மா அமைப்புகளின் சார்பாக நன்றியையும் வாழ்த்தையும் தெரிவிக்கிறோம்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாரம்பரிய செட்டிநாடு நகை தொழிலாளர் வாழ்வு மேம்பட “தங்க நவரத்தின வைர நகை தொழிற் பூங்காவும்”  விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தங்க நகை தொழிலாளர் வாழ்வு மேம்பட “தங்க நகை தொழிற் பூங்காவும்” அமைத்துக் கொடுத்திட தமிழக முதல்வர் வேண்டுகிறோம்.
தமிழ்நாட்டில் கட்டுமான பணியில் முக்கிய பங்கு வகிக்கும் தச்சு தொழிலாளர்கள் வாழ்வு மேம்பட தமிழ்நாட்டில் மூன்று இடங்களில் ”தச்சுத் தொழிற் பூங்கா” அமைத்து தர தமிழக முதல்வர்ரை வேண்டுகிறோம்.
தமிழகத்தின் முக்கிய திருக்கோயில்களில் தகுதி வாய்ந்த விஸ்வகர்மாக்களை அறங்காவலர்களாக நியமனம் செய்ய தமிழக முதல்வர் அவர்களை வேண்டுகிறோம்.
பின்தங்கிய நிலையில் இருக்கும் விஸ்வகர்மா சமுதாயத்தில் இன்று ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் தொழிற் கல்வி கற்று வருகிறார்கள். எனவே அவர்கள் கல்வி வேலைவாய்ப்பு மேம்பட தமிழக முதல்வர் அவர்கள், தொழிற்கல்வியிலும் தொழில் சார்ந்த அரசு பணிகளிலும் இட ஒதுக்கீடு செய்து அறிவிக்க வேண்டுகிறோம்.
இந்தியாவில் தமிழகத்தை தலைநிமிரச் செய்து நம்பர் ஒன் மாநிலமாக ஆட்சி செய்யும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி 2026ல் தொடர, தமிழகத்தில் உள்ள அனைத்து விஸ்வகர்மா மக்களும் 2026 சட்டமன்ற தேர்தலில் ஆதரவு தெரிவிக்கிறோம். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் பாலசுப்ரமணியன் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.