சாலையில் கவிழ்ந்த டாரஸ் லாரி மீட்பு பணி: போக்குவரத்து பாதிப்பு
திருச்சி, அக்.18 தொட்டியம் அருகே சாலையில் கவிழ்ந்த டாரஸ் லாரி மீட்பு பணியினால் போக்குவரத்து பாதிப்பு.
திருச்சி மாவட்டம் தொட்டியம் தொட்டியம் தாலுக்கா கோடியம்பாளையம் கிராமத்தில் டாரஸ் லாரி சாலையில் கவிழ்ந்தது. லாரி மீட்பு பணிகளால் திருச்சி நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் குந்தன் குமார் (21) என்பவர் நேற்று முன்தினம் புனோவில் இருந்து திருச்சிக்கு கண்டெய்னர் லாரியில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் குர்குரே,லேஸ் உள்ளிட்ட பாக்கெட் திண் பண்டங்களை லோடு ஏற்றி வந்துள்ளார்.
தொட்டியம் அருகே திருச்சி நாமக்கல் சாலையில் கோடியம்பாளையம் என்ற இடத்தில் வந்த போது டாரஸ் லாரி நிலை தடுமாறி சாலையின் ஓரத்தில் வாய்க்கால் அருகே கவிழ்ந்தது.
இதில் 21 வயதே உடைய டிரைவர் குந்தன் குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து தொட்டியம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்று கிரேன்கள் உதவியுடன் மீட்கும் பணி நடைபெற்றது.
மீட்பு பணியில் சக்தி வாய்ந்த மூன்று கிரேன்கள் ஈடுபடுத்தப்பட்டு கவிழ்ந்த லாரி நிமிர்த்தப்பட்டு சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டதது. டாரஸ் லாரி மீட்பு பணியின் போது திருச்சி – நாமக்கல் சாலையின் இரு புறமும் வாகனங்கள் தேங்கியது. இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. முசிறி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார் அறிவுரையின்படி தொட்டியம் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.