திருச்சி காவிரி – கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

0 227
Stalin trichy visit

திருச்சி காவிரி மற்றும் கொள்ளிடம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து. இந்த ஆண்டின் 7வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

திருச்சி முக்கொம்பு மேலணைக்கு தற்போதைய நிலவரப்படி 14,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டு உள்ளது இன்று நள்ளிரவுக்கு மேல் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் மற்றும் கூடுதலாக ஐந்தாயிரம் கன அடி தண்ணீர் என 35,000 கனஅடி வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்நிலையில்  பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், சலவைத் தொழிலாளர்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கால்நடைகளை அழைத்து செல்லக்கூடாது என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்

Leave A Reply

Your email address will not be published.