துறையூரில் புதுப்பிக்கப்பட்ட மின்மயானம் திறப்பு

0 213
Stalin trichy visit

திருச்சி, அக்.24  திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் கடந்த ஆண்டு பழுதடைந்திருந்த நவீன தகன எரிவாயு மேடை (Gas Crematorium) தற்போது புனரமைப்பு பணிகள் முடிவடைந்து, மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

மின் தகன எரிவாயு மேடை பழுதடைந்ததால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக அது மூடப்பட்டிருந்தது. இதனால் மழை காலங்களில் இறுதி சடங்கு செய்ய பொதுமக்கள் மிகவும் சிரமம் பொருளாதார சிரமங்களும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் துறையூர் நகராட்சியிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, துறையூர் நகராட்சி நிர்வாகம் ரூ.39 லட்சம் மதிப்பில் மின்மயானத்தை முழுமையாக புனரமைத்தது. இன்று (23.10.2025) புதுப்பிக்கப்பட்ட மின்மயானம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் துறையூர் நகராட்சி ஆணையர் கணேசன், சுகாதார ஆய்வாளர் முரளி, உதவி பொறியாளர் செந்தில் குமார், நகராட்சி பணியாளர்கள் வினோத் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.