டாஸ்மாக் பாரில் தகராறு : தட்டி கேட்ட வாலிபரை தாக்கிய ரவுடி கைது

0 124
Stalin trichy visit

திருச்சி அக்.25 திருச்சி மேல கல்கண்டார் கோட்டை கம்பி கேட் அருகாமையில் உள்ள டாஸ்மாக் பாரில் மது பிரியர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர் .அப்போது மேலகல்கண்டார்கோட்டை அர்ஜுனன் நகர் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்கிற முஹம்மது ரஃபீக் (வயது38)   திருச்சி கீழ கல்கண்டார் கோட்டை ஆனந்த் ஆகியோருக்கும் மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது அப்போது உறையூர் சோமு பிள்ளை தெரு பகுதியைச் சேர்ந்த புகழ் (வயது 26) என்பவர் இதனை தட்டி கேட்டார் இதனால் ஆத்திரமடைந்த சிவகுமாரும், ஆனந்தும் சேர்ந்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது .இதுகுறித்து புகழ் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொன்மலை போலீசார் ரவுடி சிவக்குமாரை கைது செய்தனர் .மேலும் ஆனந்தை தேடி வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.