காதலிக்க மறுத்த பெண்ணின் அண்ணன் மீது தாக்குதல்: 3 பேர் கைது

0 174
Stalin trichy visit

திருச்சி அக் 25 – திருச்சி அரியமங்கலம் மலையப்பநகர் அண்ணா தெரு பகுதியைச் சேர்ந்தவர் அமுல்ராஜ் (வயது 32. ) இவரின் மூத்த சகோதரியை மண்ணச்சநல்லூர் அக்ரஹாரம் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் ரமேஷ் காதலித்து வந்தார்.

ஆனால் அவரது காதலை அந்தப் பெண் ஏற்றுக் கொள்ளவில்லை .இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் தனது சகோதரர் சிவக்குமார் மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோருடன் சேர்ந்து அமுல்ராஜ் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அந்த பெண்ணிடம் தகராறு செய்த போது அமுல்ராஜ் தட்டி கேட்டார். ஆத்திரமடைந்த ரமேஷ் உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து அவரை இரும்பு ராடால் தாக்கினர். இதில் அவரது உதட்டில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து அமுல்ராஜ் அரியமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரமேஷ், சிவக்குமார், சந்தோஷ்குமார் ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.