மதுவுக்கு அடிமையான இருவர் உயிரிழப்பு
திருச்சி அக். 25 திருச்சி பழைய கரூர் ரோடு கீழ சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 29). இவர் சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு டிபன் கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.
மதுவுக்கு அடிமையான இவர் சிந்தாமணி அண்ணா சிலை அருகே மயங்கி கிடந்தார் பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் டாக்டர்கள் பரிசோதித்து விட்டு கோபி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதை போன்று திருச்சி வண்ணாரப்பேட்டை திரு.வி.க. நகர் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ் குமார் (29 ) மதுவுக்கு அடிமையான இவர் கடந்த ஒரு வாரமாக அளவுக்கு அதிகமாக மது அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் வீடு திரும்பி அவர் திடீரென உயிரிழந்தார் .இது குறித்து திருச்சி அரசு மருத்துவமனை
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.