முசிறி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருச்சி, அக்.25 திருச்சி மாவட்டம் முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா தலைமையில் முசிறி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.வட்டாட்சியர்கள் செல்வி மற்றும் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். துறை சார்ந்த அலுவலர்கள் அரசின் திட்டங்கள் குறித்து பேசினர்.
வெங்காய கொட்டகை மானியம் குத்தகைதாரருக்கு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஏழு வருடம் குத்தகை தாரராக இருந்தால் மானியம் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். விவசாயிகள் குத்தகைதாரர் பதிவேடுகள் வட்டாட்சியர் அலுவலகத்தால் பதிவு செய்யப்படுவதில்லை எனவிவசாயிகள் தெரிவித்தனர் -துறையூர் வட்டத்தில் எஸ் என் புரம் பகுதியில் வாரி புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்றக் கோரியதற்கு
அனைத்து துறை அதிகாரிகளும் எங்களது கட்டுப்பாட்டில் இல்லை என தெரிவிக்கின்றனர் இது குறித்து யாரிடம் முறையிடுவது என புகார் அளித்த பெண் கேட்டார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சார் ஆட்சியர் தெரிவித்தார்.தும்பலம் மற்றும் அதைச் சார்ந்த பகுதியில் மயிலால் அதிக பாதிப்பு வருகிறது இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முறையிட்டனர்.
கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.