தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 5 பேர் கைது

0 157
Stalin trichy visit

 திருச்சி அக் 27 திருச்சி சீனிவாசன் நகர் 6வதுமெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 27) இவர் கருமண்டபம் சோதனை சாவடி அருகில் நின்று கொண்டு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்தார்.

இதேபோன்று பொன்மலை சந்தை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த சார்லஸ் (வயது 22) என்ற வாலிபரையும், பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பஸ் நிறுத்தம் அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த மணிகண்டன் (வயது 28) என்பவரையும்,

தில்லைநகர் போலீசரத்துக்குட்பட்ட 11 வது குறுக்கு சாலை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த பிரசாந்த் ராஜா (வயது 20), அரசு மருத்துவமனை போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் மருத்துவமனை மெயின் கேட்டு அருகில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த மணிகண்டன் (வயது 25)என்பவரையும்
போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 5பேரையும் போலீசார்
ஜாமினில் விடுதலை செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.