போதை மாத்திரை விற்பனை செய்த ரவுடி கைது

0 191
Stalin trichy visit

திருச்சி அக் 27- திருச்சி உறையூர் டாக்கர்ஸ் ரோடு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக உறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த பொழுது அங்கு போதை மாத்திரை விற்றுக் கொண்டு இருந்த தில்லைநகர் காந்திபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து போதை மாத்திரை , ஊசிகள்,
செலயன் பாட்டில் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தபோது மணிகண்டன் ரவுடி என்பது தெரிய வந்தது இதையடுத்து போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.