திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.100 கோடியில் உயர்சிகிச்சை பிரிவு கட்டடம் : சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு

0 313
Stalin trichy visit

திருச்சி அக்.28 திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.100 கோடியில் கட்டப்பட்டு வரும் உயர் சிகிச்சை பிரிவு கட்டிடத்தை சுகாதாரத்துறை முதன்மை செயலர் செந்தில்குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவம னையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வெளி நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் சிகிச்சைபெற்று வருகின்றனர். தனியாருக்கு இணையாக திருச்சி அரசு மருத்துவம னையில் பல்வேறு நவீன சாதனங்கள் கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் நோயா ளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே உள்ளது. இந்நிலையில் நோயாளி கள் வசதிக்கேற்ப மருத்துவ மனை வளாகத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதன்படி மருத்துவமனை வளாகத்தில் ரூ.100 கோடியில் கட்டப்பட்டு வரும் விரிவான உயர்சிகிச்சை பிரிவு கட்டிடத்தை நேற்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கட்டிடத்தின் வரைபடத்தை முதன்மை செயலாளரிடம் காண்பித்து அதிகாரிகள் விளக்கி கூறினர். அப்போது, மாவட்ட ஆட்சியர் சரவணன் உடனிருந்தார்.
தொடர்ந்து பணிகளை விரைந்து தரமாக முடிக்க பொதுப்பணித்துறை அதி காரிகளுக்கு முதன்மை செயலாளர் செந்தில்குமார் அறிவுறுத்தினார்.
இதையடுத்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் குமரவேல், மருத்துவமனை கண்காணிப்பாளர் உதயா அருணா, மருத்துவர்கள்,
செவிலியர்கள், செவிலியர் பயிற்சி மய்ய முதல்வர், காவல் மற்றும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தை சுகாகாரத்துறை முதன்மைச் செயலாளர் செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சரவணன் உள்பட பலர் உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.