பெல் வளாக குடியிருப்பில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்
திருச்சி, அக்.29 திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பெல் பாய்லர் வளாக குடியிருப்பு மக்கள் பயன்பெறும் வகையில் வளாக குடியிருப்பில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது.
மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 3மற்றும் 8வது வார்டு பெல் “இ” செக்ட்டார் வளாக குடியிருப்பு காமராஜபுரம் பகுதி மக்கள் என சுமார்1500 பெல் ஊழியர்களின் குடும்பத்தினர்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பெல்வளாக குடியிருப்பு திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது.
முகாமிற்கு நகராட்சி தலைவர் காயம்பூ தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் பட்டுசாமி, ஆர்டிஓ அருள்,திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இம்முகாமில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முகாமினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்து வருவாய்த்துறை மூலம் துவாக்குடி நகராட்சியை சேர்ந்த ஆறு பேருக்கு இலவச நத்தம் பட்டாவினை வழங்கினார்
மேலும் முகாமில் கலந்து கொண்ட மகளிர் உரிமை சிறப்புத் திட்ட செயலாக்க துறை மூலம் தாய்மார்கள் வழங்கப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கிறதா என்பதையும் கேட்டறிந்தத்துடன் அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார்.
இது முகாமில் தலைவர் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.