தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை: 6 பேர் கைது

0 100
Stalin trichy visit

திருச்சி நவ 3 – திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ்சரகத்துக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த அருள் முருகன் (வயது 42), பொன்மலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட முன்னாள் ராணுவ காலனி பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த ராஜா (வயது 53), திருவரங்கத்தில் கீழவாசல் பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த ஷகிலா பேகம் (வயது 52),காந்தி மார்க்கெட் பகுதியில் தஞ்சை ரோடு பகுதியில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வெங்கடாசலம் (வயது 43), பாலக்கரை பகுதி கெம்ஸ் டவுன் பகுதியில்
புகையிலை பொருட்களை விற்பனை செய்த சதீஷ்குமார் (வயது 42), உறையூர் பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த முத்து கண்ணன் (வயது 24 )ஆகிய 6பேரை போலீசார் கைது செய்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.பிறகு அனைவரையும் ஜாமினில் விடுதலை செய்தனர்.

போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது

திருச்சி அண்ணாதெரு மதுபான கடை அருகில் வாலிபர் ஒருவர் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துஅந்த வாலிபரை பிடித்து சென்று விசாரணை செய்தபோதுமேல சிந்தாமணி பகுதியை சேர்ந்த ஆசிக் பாஷா வயது 24 என்பது தெரியவந்தது இதை எடுத்து போலீசார் அவரை கைது செய்து போதை மாத்திரை மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.