பிறந்தநாள் அன்று என்னை சந்திக்க தொண்டர்கள் வரவேண்டாம் : அமைச்சர் கே.என்.நேரு வேண்டுகோள்
திருச்சி நவ 3 பிறந்தநாள் அன்று என்னை சந்திக்க தொண்டர்கள் வரவேண்டாம் என்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,
வருகின்ற 9ந்தேதி எனது பிறந்தநாள் அன்று நான் திருச்சியில் இல்லை. அதனால் அன்றைய தினம் என்னை பார்ப்பதற்காக கழகத் தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட எனது நலம் விரும்பிகள் அனைவரும் என்னை பார்ப்பதற்கு இல்லத்திற்கோ அலுவலகத்திற்கோ நேரில் வர வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
யாரும் எந்த நிகழ்ச்சிகளும் எனது பிறந்த நாளுக்காக நடத்த வேண்டாம் என்று மீண்டும் உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார்.