கஞ்சா, போதை மாத்திரை, புகையிலை பொருள் விற்ற 8 பேர் கைது
திருச்சி, நவ.3 திருச்சி குட்ஷெட் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது . தகவலின் பேரில் மதுவிலக்கு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர் . அப்போது கஞ்சா விற்றதாக எடமலைப்பட்டி புதூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த யோகநாதன் ( 20) கைது செய்து அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.
புகையிலை விற்ற 6 பேர் கைது:
திருச்சி மாநகர பகுதியில் புகையிலை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து செசன்ஸ் கோர்ட், கே.கே. நகர், பாலக்கரை, கோட்டை அந்தந்த போலீஸ் சரகத்துக்குட்பட்ட பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பொன்னகர் அருகே புகையிலை விற்றதாக கருமண்டபம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் ( 28), காஜாமலை காலனி அருகே புகையிலை விற்றதாக ஏர்போர்ட் காமராஜர் நகரை சேர்ந்த ஜாகிர் உசேன் ( 32), நடு குஜிலி தெரு அருகே விற்றதாக அன்புதாசன் (62),பாலக்கரை குட்ஷெட் தண்டவாளம் அருகே புகையிலை விற்றதாக அரியமங்கலம் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (25) மற்றும் பெல்ஸ் கிரௌண்ட் அருகே விற்றதாக கே.கே நகர் எல்ஐசி காலனி சேர்ந்த பாலசுப்பிரமணியன் (23) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து 350 கிராம் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.பிறகு அனைவரையும் ஜாமினில் விடுதலை செய்தனர்.
போதை மாத்திரை விற்றவர் கைது:
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கல்பாளையம் அருகே போதை மாத்திரை விற்றதாக எடத்தெரு பிள்ளைமா நகரை சேர்ந்த சச்சின் (22) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகள், ஊசிகளை பறிமுதல் செய்தனர்