மணப்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருச்சி, ஜூலை 4 திருச்சி மாவட்டம், மணப்பாறை அரசு பொது மருத்துவமனையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சியர் பிரத்திக் தாயள் நேற்று நேரில் பார்வையிட்டு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மருந்துகள் இருப்பு விபரம், சிகிச்சை பெற வருபவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.