மகனை தாக்கியதை தட்டி கேட்ட தாய், தந்தை மீது தாக்குதல் 2 பேர் கைது

0 143
Stalin trichy visit

திருச்சி நவ. 3 திருச்சி தில்லை நகர் வடவூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் இவரது மனைவி நாகலட்சுமி (வயது 35). இந்த தம்பதியரின் மகன் கிஷோர்.

இந்த சிறுவனும் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மகள் இமையா என்பவரும் விளையாடிக் கொண்டிருக்கும் போது மோதிக்கொண்டனர். இதை அறிந்த இமையாவின் பாட்டி சாந்தி ( 54 ) கிஷோரின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
உடனே நாகலட்சுமி மகனை தாக்கியது தொடர்பாக சாந்தியை தட்டி கேட்டார்.
இதில் ஆத்திரமடைந்த நாகலட்சுமி மற்றும் அவரது கணவர் சதீஷ்குமார் ஆகியோரை கார்த்திக் வீரபாபு (54), சுரேஷ் (40) சாந்தி (54) ஆகியோர் தாக்கினர்.இதில் நாகலட்சுமிக்கு மார்பிலும் அவரது கணவருக்கு தலையிலும் காயம் ஏற்பட்டது பின்னர் இது குறித்து நாகலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் கார்த்திக் சுரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மற்ற வீரபாபு சாந்தி ஆகிய இரண்டு பேர் மீதும் தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.