மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் : அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
திருச்சி, நவ.14 திருச்சி உறையூர், மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழர் நிகழ்வில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன், மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், முதன்மைக் கல்வி அலுவலர் கோ.கிருஷ்ணப்பிரியா, மெதடிஸ்ட் பள்ளி தலைமையாசிரியர் லதாமேரி ஷெலீன், நகரப் பொறியாளர் சிவபாதம், மண்டலத் தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.