கார்த்திக் சிதம்பரம் எம்.பி. 54வது பிறந்தநாள் : தடபுடல் விருந்து வைத்து கொண்டாட்டம்

0 459
Stalin trichy visit

திருச்சி, நவ.18  மணப்பாறை அருகே  கோவிலில் தடபுடல் விருந்து வைத்து கார்த்திக் சிதம்பரத்தின் 54வது பிறந்த நாளை கொண்டாடிய மாநில பொறுப்பாளர் ரமேஷ்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள மட்டப்பாறை அருள்மிகு பத்ரகாளியம்மன் கோவிலில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரத்தின் 54 -வது பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் மாநில பொறுப்பாளர் ரமேஷ், வையம்பட்டி முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் வித்யா ரமேஷ் ஆகியோர் பத்ரகாளியம்மனுக்கு 9 வகையான அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தினர்.

பின்னர். காலை அறுசுவை உணவு வழங்கப்பட்டது. மதியம் முதல் மாலை வரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடபுடலாக கறி விருந்து வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற கவுன்சிலர் மிலிட்டரி ந,முருகன், மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்,

Leave A Reply

Your email address will not be published.