முசிறி அருகே வாலிபர் வெட்டிக்கொலை
திருச்சி, நவ.18 திருச்சி மாவட்டம் முசிறி அருகே ஊருடையாபட்டி கிராமத்தைச் சேர்ந்த வாலிபர் குணசேகர் (25), இவருக்கும் சின்ன காருகுடி கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ் (27) , மதிவாணன் (24) ஆகியோருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது.
நேற்று இரவு மேட்டுப்பாளையம் என்ற ஊரில் ஹரிஷ் மற்றும் குணசேகரன் இருவருக்கும் இடையே வாய் தகராறு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் குணசேகரன் நேற்று நள்ளிரவு காருகுடி கிராமத்திற்கு நண்பர்களுடன் ஹர்ஷ் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஹரிஷ் வீட்டில் வைத்திருந்த அரிவால்மனையை எடுத்து குணசேகரன் முகத்தில் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே குணசேகரன் உயிரிழந்தார்.
சடலத்தை கைப்பற்றிய தா.பேட்டை போலீசார் துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைத்துள்ளனர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஹரிஷ் மற்றும் மதிவாணன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குணசேகரன் உறவினர்கள் தா.பேட்டை to மேட்டுப்பாளையம் சாலையில் நியாயம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். முசிறி போலீஸ் டிஎஸ்பி சுரேஷ்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் செல்லதுரை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.