சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகளை கேட்போம்: சி.பி.ஐ. மாநில செயலாளர் பேட்டி

0 224
Stalin trichy visit

திருச்சி, நவ.18  2026 தேர்தலில் கூட்டணியில் எட்டு இடங்கள் வரை கேட்போம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன்பேட்டி

திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை 14.5 கிலோ மீட்டர் சர்வீஸ் சாலை அமைக்க நீண்ட கால பொதுமக்கள் போராடி வருகிறார்கள்.  இந்த சாலையில் அதிகப்படியான வாகனங்கள் சென்று வருவதால் விபத்துகளும் உயிர்ச்சேதங்களும் ஏற்படுகின்றன.

விபத்துகளை குறைக்க சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரித்து வருகிறது.

இந்த சர்வீஸ் சாலைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரித்து வருகிறது. தமிழக அரசு ஆதரவு அளித்து வருகிறது. அதே போல் சர்வீஸ் சாலை அமைக்க நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் திட்டம் செயல் படாமல் இருப்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

எனவே தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு நிர்ப்பந்தம் வைக்க வேண்டும்.
உடனடியாக ஒன்றிய அரசும் தேசிய நெடுஞ்சாலை துறையும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

பீகார் தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஜனநாயகம் தோல்வி அடைந்திருக்கிறது. ஆடுகளம் இல்லாமல் போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளார்கள். போட்டி இல்லாமல் கோப்பை வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் இந்த அநீதிகள் நிலைநாட்டப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையமும் ஏறத்தாழ ஒன்றிய அரசுடன் முடங்கி உள்ளது.
நீதிமன்றம் தனது நீதி கண்களை மூடி கொண்டுள்ளது. எனவே ஒன்றிய அரசும் பீகார் அரசும் சேர்ந்து ஜனநாயகம் மீது தொடுத்த தாக்குதலாக கருதுகிறோம்.
இதுவரை உலகத்திலேயே நமது நாட்டில் தான் தேர்தல் முடிவு எவ்வாறாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிற அரசியல் நாகரீகம் நம் நாட்டில் தான் உள்ளது.

காங்கிரஸ் பலமுறை தேர்தலில் தோல்வியுற்றது. தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் இருந்ததில்லை. முதல் முறையாக தனது தோல்வி மீது கேள்வி எழுந்துள்ளது. இதை தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் கவனத்தில் கொள்ள வேண்டும். இது நீடிப்பது நல்ல முறையல்ல.
65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் அதிலே சிறுபான்மையின்மை மக்கள்தான் அதிகம் என்று கூறிய போதும் இதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாமல் இருப்பது ஜனநாயக தேர்தல் முறையை சிதைக்கின்ற வகையில் மாநில அரசும் ஒன்றிய அரசும் நடந்து வருகிறது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல.

இதே முறை மேற்கு வங்கத்திலும் தமிழகத்திலும் நடைபெறும் என கணிப்பது சரியல்ல.

இங்கே ஆடுகளம் வேறு. இங்கே திராவிடம் செதுக்கப்பட்ட மண். இங்கே பிரிவினைக்கு இடமில்லை. மக்களை பிரிக்கின்ற கருத்துக்களுக்கு இடமில்லை. மதச்சார்பின்மையை, மத நல்லிணக்கத்தை சிதைக்கின்ற கருத்தியலுக்கு தமிழ் மண்ணிலே இடமில்லை என்பதை தமிழக மக்கள் நிரூபிப்பார்கள். அதேபோன்று எஸ் ஐ ஆர் எடுத்த எடுப்பிலேயே தோல்வி அடைந்துள்ளது. நியமிக்கப்பட்ட ஊழியர்கள் திணறி வருகிறார்கள். சில இடங்களில் திமுக மற்றும் கூட்டணி தோழர்கள்தான் உதவி செய்து வருகிறார்கள்.

எஸ் ஐ ஆர்யை தமிழக முதல்வர் அவர்களின் கோரிக்கை ஏற்று நிறுத்தி வைக்க வேண்டும்.
அதை மீறி வலுக்கட்டாயமாக தொடர்ந்தால் ஒன்றிய அரசுக்கு தமிழக மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள்.

திமுக தலைமையில் எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. மேலும் தமிழக மக்கள் எங்கள் கூட்டணிக்கு வருவார்கள். குறுவை சாகுபடி  பாதிக்கப்பட்டபோது மத்திய குழு ஆய்வு செய்தது, ஆனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இயற்கை சீற்றத்தின் போது எந்த மாநிலத்தின் மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அவர்களுக்குவழங்க வேண்டிய நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும். எதிர்க்கட்சி ஆட்சி அடுத்து மாநிலங்களில் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் நிதியை முடக்கி வைக்கிறார்கள். ஒன்றிய அரசு அதிகாரத்தை குவித்து வைத்திருக்கிறது.

ஒன்றிய அரசு தனது அதிகாரக் குவியலை கொண்டு தன் கருத்துகளுக்கு இணங்காதவர்களை முடக்குகிறது இந்த செயலை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். ஒன்றிய அரசு அதிகாரத்தை குவித்து வைத்திருக்கிறது இந்த அதிகார குவியல் தான் மாநிலத்தினுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்கிறது.

பேராபத்து இந்தியாவில் சூழ்ந்து இருப்பதை தமிழக மக்கள் உணர்வார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் நல்லதொரு தீர்ப்பு அளிப்பார்கள்.

சர்வீஸ் சாலை சில வருடங்களாகவே பணிகள் தொடங்காமல் இருந்து வருகிறது . கடைகள் பாதிக்காத வகையில் அவர்கள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஆனால் கடைகளா மக்களா என்று பார்க்கும் பொழுது மக்கள் கோரிக்கை தான்.

சர்வீஸ் சாலை திட்டம் வருவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்களுடன் இணைந்து செயல்படுவோம். மாநில அரசுக்கு நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்.

தமிழக அரசு காலதாமதம் படுத்தாமல் சர்வீஸ் சாலை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். மக்கள் கோரிக்கை என்று வரும் பொழுது முதல்வர் அவர்களின் முன் நிற்போம்.

மாநில அரசு தயங்க கூடாது கால தாமதம் படுத்தக் கூடாது. எந்த காரணமாக இருந்தாலும் மக்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். அடுத்த கட்ட நடவடிக்கையாக போராட்டத்தை செய்ய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தயங்க மாட்டோம். எவையெல்லாம் மக்கள் நலனோ அவற்றை கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஅதிகாரத்தில் இல்லை திட்டங்களை நிறைவேற்றும் இடத்தில் இல்லை. திட்டங்களை நிறைவேற்றுங்கள் என்று சொல்கிற இடத்தில் உள்ளோம். மக்களோடு சேர்ந்து இருந்து ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் அழுத்தம் தெரிவிப்போம்.

நாங்கள் கடந்த தேர்தலில் ஆறு இடங்களில் போட்டியிட்டோம்.

எங்கள் கட்சி வளர்ந்து வருகிறது. நூறாண்டு கால இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. தேர்தல் முறையில் நாங்கள் வெற்றி பெறாவிட்டாலும் எங்கள் இயக்கம் நூறாண்டு காலமாக சிதையாமல் வளர்ந்து இயங்கி வருகிறது. சட்டமன்றத் தேர்தல் வரும் பொழுது நாங்கள் ஒரிரு இடங்கள் அதிகமாக கேட்போம்.

இந்தப் பகுதியில் அதிகப்படியான தொழிற்சாலைகள்bhel,oft போன்ற தொழிற்சாலைகளில் கனரக வாகனங்கள் உள்ளதால் 32 மீட்டர் சாலை ஆனது போதுமானதாக இருக்காது 45 மீட்டர் nh சாலையாக அமைத்தால் மட்டுமே இப்பகுதிகளில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் இருக்கும் 45 மீட்டர் கொடுத்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கையாகவும் வைத்துள்ளோம்.
45 மீட்டர் சாலை அமைக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தில் ஆணை ஆனால் 35 மீட்டர் சர்வீஸ் ரோடு வழங்குவது தவறு. இப்பகுதியில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் இருவரும் இவர்களும் இருவரும் விருப்பப்படும் கோரிக்கையாக தான் இது உள்ளது. இருந்தாலும் இக்கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருப்பது மக்களின் மிகுந்த வேதனையாக உள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக உடனடியாக நிலத்தினை கையகப்படுத்த வழங்கப்பட வேண்டும் என்றும் சாலை அமைக்கும் பணியை விரிவு படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து போராட்டத்தை நடத்துவோம். நாங்கள் கூட்டணி கூட்டணி வைத்திருப்பதே ஒன்றிய அரசை எதிர்த்து கூட்டணி ஆட்சி பங்கு பெற்று வருகிறோம்.

கூட்டணி மட்டும் போராட்டத்திற்கான காரணம் அல்ல மக்களின் பிரச்சினைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்றும் போராட்டம் மூலம் தீர்வு காணும் வெற்றி பெறும் என்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.