எஸ்.ஐ.ஆர். பணிகளை புறக்கணித்து வருவாய்த்துறையினர் போராட்டம்
திருச்சி, நவ.19 தமிழகத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முன்னிட்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும் தற்பொழுது பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமினால் வருவாய் துறையினருக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும் கால அவகாசம் வழங்காமல் உடனடியாக பணிகளை மேற்கொள்ள வற்புறுத்துவதாலும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவதாக கூறி தமிழக முழுவதும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கூட்டமைப்பைச் சார்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் சிறப்பு தீவிர திருத்த முகாம் பணியினை புறக்கணிப்பு போவதாக அறிவித்தனர்.
அதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுக்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அந்தோணிராஜ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெற்றிச்செல்வன் ஆகியோர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த முகாம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கால அவகாசம் வழங்கும் வரை காலவரையற்ற பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
இதனால் வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்த முகாம் பணிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.