எஸ்ஐஆர் படிவங்கள் பிஎஸ்ஓ செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0 175
Stalin trichy visit

திருச்சி, நவ.24 திருச்சியில் எஸ்ஐஆர் படிவங்கள் பிஎஸ்ஓ செயலியில் பதிவேற்றம் செய் யும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் ஆய்வு செய்தார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு,
இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின்படி வரும் ஜன.1 சூம் தேதி 2026 தகுதி ஏற்பு நாளாக கொண்டு தகுதியுள்ள வாக்காளர்கள் பட்டியலில் விடுபடவில்லை என்பதையும், தகுதியற்ற நபர்களை நீக்கவும் திருச்சி மாவட்டத்திற்குட் பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் கடந்த நவ.4ம் தேதி முதல் சிறப்பு தீவிரத்திருத்த பணி எஸ்ஐஆர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த சிறப்பு தீவிரத்திருத்த பணியில் திருச்சியில் உள்ள 9 தொகுதிகளிலும் நவ.22 மற் றும் 23ம் தேதி 2 ஆயிரத்து 543 வாக்குசாவடி மையங்களி லும் அமைக்கப்பட்ட உதவி மையங்களின் வாயிலாக 2 லட்சத்து 11 ஆயிரத்து 605 எண் ணிக்கையிலான கணக்கீட்டு படிவங்கள் பூர்த்தி செய்யப் பட்டு வாக்காளரிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்திற்குட் பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 23 லட்சத்து 68 ஆயி ரத்து 968 எண்ணிக்கையிலான மொத்த வாக்காளர்களில், 22 லட்சத்து 30 ஆயிரத்து 850 எண்ணிக்கையிலான வாக்காளர்களுக்கு முன்நிரப்பப்பட்ட படிவங்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வி யோகம் செய்யப்பட்டுள்ளது. 11 லட்சத்து 64 ஆயிரத்து 968 எண் ணிக்கையிலான வாக்காளர்களிடமிருந்து மீள பெறப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட முன்நிரப்பப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் செயலியில் பதிவேற்றம் செய் யப்பட்டுள்ளது.
நேற்று 138 – மணப்பாறை, 141-திருச்சி (கிழக்கு) மற்றும் 146 – துறையூர் சட்டமன்ற தொகு திகளில் சிறப்பு வாக்குச்சாவடி முகாம்களின் மூலம் வாக்கா ளாகளுக்கு கணக்கீடு படிவங் கள் வழங்கிடும் பணியினையும், உதவி மய்யங்களின் செயல்பாடுகளையும், பூர்த்தி செய்யப் பட்ட படிவங்களை பிஎல்ஓ செயலியில் பதிவேற்றம் செய் யும் பணியினையும் திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர், திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

Leave A Reply

Your email address will not be published.