மாநில ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஸ் கபாடி போட்டி : ஈரோடு அணி முதல் பரிசை வென்றது

0 179
Stalin trichy visit

திருச்சி, நவ.24  திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில ஜூனியர் பெண்கள் சாம்பியன்ஸ் கபாடி போட்டி- ஈரோடு அணி முதல் பரிசை வென்றது

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் திருச்சி மாவட்ட அமைச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்தும் தமிழ்நாடு மாநில ஜூனியர் பெண்கள் 51-வது சாம்பியன்ஸ் கபடி போட்டி திருச்சி இந்திரா கணேசன் கல்லூரியில் மூன்று நாட்கள் நடைபெற்றது.

இந்த விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட செலக்சன் கமிட்டி உறுப்பினர் தனா சதீஷ் செய்திருந்தார்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் 36 மாவட்டத்தை சேர்ந்த 576 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

கபாடி போட்டியில் இறுதிச்சுற்று திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனைகளுக்கும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கும் நடைபெற்றது. போட்டியின் இறுதியில் 33 புள்ளிகளை பெற்று ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அணி முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கம் மற்றும் கோப்பையை வென்றது .

12 புள்ளிகளை பெற்று திருநெல்வேலி மாவட்ட அணி இரண்டாவது இடத்தை பெற்று வெள்ளி பதக்கம் மற்றும் கோப்பையை பெற்றது.

முதல் மூன்று இடத்தை பெற்ற 30 வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். அவர்களில் 14 வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சர்வதேச போட்டிகளில் பங்கு பெற உள்ளனர் .

கடந்த நான்கு ஆண்டுகளாக பெண்கள் கபடி பிரிவில் ஈரோடு மாவட்டம் முதல் பரிசை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்க பரிசு, வெள்ளி கேடயம் மற்றும் சான்றிதழ்களை தமிழ்நாடு அமைச்சூர் கபாடி கழகம். மாநில செயலாளர் சபியுல்லா,நீரோ ஒன் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ் விஜயகுமார் ஆகியோர் வழங்கினார்கள்..

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட அமைச்சூர் கபாடி கழக தலைவர் தங்க நீலகண்டன், செயலாளர் வெங்கடசுப்பு, காவல் ஆய்வாளர் மணிமாறன், அகில இந்திய இந்த விளையாட்டு நடுவர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.