டாஸ்மாக்கில் காலி மதுபாட்டிலை திரும்ப கொடுத்து ரூ.10 பெறலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்
திருச்சி, நவ.24 டாஸ்மாக்கில் வாங்கும் மதுபான பாட்டில்களை, மது அருந்திய பின்னர் மீண்டும் அதே சில்லறை விற்பனை நிலை யங்களில் ஒப்படைத்து ரூ.10 பெற்றுக்கொள்ளும் திட்டம், திருச்சியில் நாளை (நவ.25 ஆம் தேதி) முதல் அமலுக்கு வருவதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்திலுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை விளை நிலங்கள், பொது இடங்கள் மற்றும் சாலைகளில் வீசி எறிவதை தடுக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் மதுபாட்டில்கள், காலியான பிறகு அவற்றை அதே சில்லறை விற்பனை கடைகளில் திரும்ப பெற்றுக் கொள்ளும் திட்டம் திருச்சி மாவட்டத்தில் நாளை (நவ.25) முதல் திருச் சியில் அமலுக்கு வருகிறது.
இத்திட்டம் ஏற்கெனவே 19.01.2024 முதல் திருவாரூர், நாகப்பட்டினம், தேனி, கன்னியாகுமரி, தர்மபுரி, தஞ்சாவூர் ஆகிய மாவட் டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இம்மு றையில் மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களை அடையாளம் காணும் வகையில் மதுபாட்டில்கள் மீது கடை எண் குறிப்பிட்டு ரூ.10 என அச்சிடப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக் கும். அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைக ளில் விற்பனை செய்யப்ப டும் ஒவ்வொரு மதுபாட் டில்களையும் விற்பனை செய்யும் போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலை யுடன் சேர்த்து கூடுதலாக ரூ.10 வாடிக்கையாளரிடம் இருந்து பெறப்படும். அவ்வாறு வாடிக்கையாளர் கள் மதுபான கடைகளில் இருந்து வாங்கும் மதுபாட் டில்களை அதில் ஒட்டப் பட்டிருக்கும் ஸ்டிக்கரோடு அதே மதுபான கடையில் காலியாக திரும்ப ஒப்படைக்கும் போது ஏற்கெனவே பெறப்பட்ட ரூ.10 திரும்ப வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.