திருச்சி விமான நிலையத்தில் ரூ.4 கோடி மதிப்பிலான போதை பொருள் – தடை செய்யப்பட்ட 2477 ஆமைகள் பறிமுதல்

0 196
Stalin trichy visit

திருச்சி, நவ.24  திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 4 கோடி மதிப்பிலான போதை பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட 2477 ஆமைகள் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவிலான தங்கம் மற்றும் தடை செய்யப்பட்ட உயிரினங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிக அளவில் கடத்திவரப்பட்டது இதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையத்திற்கு குறைந்த அளவிலான தங்கம் கடத்தப்பட்டு வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்யும் போது அதற்கான சுங்கவரியினை செலுத்திவிட்டு பயணிகள் வாங்கிச் செல்லும் நிலை இருந்து வருகிறது இந்த நிலையில் நேற்று முன்கினம் இரவு சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது இந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தனர் அப்போது அவர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அரிய வகை ஆமைகளை கடத்தி வருவதை கண்டுபிடிக்கப்பட்டது சோதனையில் அதில் 2477 ஆமைகள் இருந்ததும் தெரிய வந்தது இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இந்த ஆமை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இந்த நிலையில் ஏர் ஏசியா விமானம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்தது இந்த விமானத்தில் தாய்லாந்தில் இருந்து மலேசியா வழியாக திருச்சிக்கு வந்த பயணி ஒருவரின் உடமைகளை சோதனை செய்தபோது அதில் ரூபாய் 4 கோடி மதிப்பிலான போதைப் பொருள் (பெதாடமின்) மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது இதனை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அவர் மீது மேல் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் தடை செய்யப்பட்ட ஆமைகள் மற்றும் போதை பொருள் பறிமுதல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.